‘உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்’ - என் ற ஔவையின் வாக்கின்படி உணவு, உடை, உறைவிடம் ஆகியவை மனிதனின் அடிப்படைத் தேவைகளாகும்.
கோடி பாபா ஆலயம் மற்றும் அறிவிக்கப்பட்ட இடங்களில் - மகான்களின் ஜயந்தி, பரிபூர்ண தினம், பண்டிகை, சிறப்பு-விசேஷ தினங்கள், புண்ணிய காலங்களில், ஏழை-எளியோர், வறியவர், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற பெண்கள், குழந்தைகளுக்கு - 'புதிய' சேலை+ரவிக்கை துண்டு, வேஷ்டி+துண்டு, குழந்தைகளுக்குரிய வஸ்திரங்கள், மற்றும் பாய், போர்வைகள் & கம்பளி முதலியவைகளை அவர்களின் வாழ்வாதாரத்திற்காக பணிவு மற்றும் அன்புடன் வழங்கப்படுகிறது.
அன்பர்கள், தங்களது வேண்டிய தினங்களில், ஏழை, எளிய மக்களுக்கு வஸ்திரதானம் செய்வதற்கும் டிரஸ்ட் கவுண்டர் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
வஸ்திரதான பலன்:
வஸ்திரதானம் செய்வதினால், சகல ரோக நிவர்த்தி மற்றும் ஆயுள் விருத்தி உண்டாகும்.
+-+-+-+-+
வஸ்திரம் (ஆடை) ஆன்மாவோடு தொடர்புடையது. தர்ம சாஸ்திரங்கள், நாம் அணியும் வஸ்திரம் நமக்கு சாத்வீக எண்ணங்களைத் தோற்றுவிப்பதாகவும், தெய்வீக ஆற்றலை கிரகித்துக் கொள்வதற்கு ஏதுவாகவும் இருக்க வேண்டும் என்று கூறுகின்றன.
தேவையான தருணத்தில், எளியவற்கு செய்யப்படும் வஸ்திர தானம், ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்த்தன மலையின் கீழ், மக்களை காத்து ரக்ஷித்தற்கு ஒப்பாகும்".
"எளியவர்களுக்கு வஸ்திர தானம் செய்வது, மூர்த்திகளுக்கு வஸ்திரம் சமர்பிப்பதற்கு ஒப்பாகும்.
#DharmaCares - http://bit.ly/354SI6A
Call: +919444383104